பிரதமர் நரேந்திர மோடி பொங்கல் பண்டிகையையொட்டி தமிழில் பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது டிவிட்டர் பதிவில், தமிழ் சகோதர, சகோதரிகளுக்கு இனிய பொங்கல் வாழ்த்துகள். தமிழர் பண்பாட்டின் மேன்மைகளை வெளிப்படுத்தும் மிகச்சிறந்த பண்டிகை இது என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இயற்கையோடு இணைந்து வாழவும், கருணை உணர்வைப் பெருக்கவும் இந்த பண்டிகை நம்மை தூண்டட்டும் என்றும் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.