தமிழ் உணர்வறிந்து கைவிட்டேன் என விஜய் சேதுபதி சொல்வார் – பார்த்திபன்

0
236

முரளிதரன் பயோபிக்கை, தமிழ் உணர்வறிந்து கைவிட்டேன் என விஜய் சேதுபதி சொல்வார் என்பது என் யூகம் என பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை கதையில் நடிக்க விஜய் சேதுபதிக்கு எதிர்ப்பு கிளம்பி வருகிறது.

இந்தப் படத்துக்கு ‘800’ என தலைப்பு வைத்துள்ளனர். ‘கனிமொழி’ படத்தை இயக்கிய எம்.எஸ்.ஸ்ரீபதி இயக்குகிறார்.

விஜய் சேதுபதி, முரளிதரன் பயோபிக்கில் நடிப்பது உறுதியானதை அடுத்து அவருக்கு மீண்டும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. சமூக வலைதளங்களில் அவருக்கு எதிராக பலர் கருத்துக்களை தெரிவித்து வந்தனர். இந்நிலையில் இந்தப் படத்தின் மோஷன் போஸ்டர், வெளியிடப்பட்டது.

இதையடுத்து ஷேம் ஆன் விஜய் சேதுபதி என்ற ஹேஷ்டேக், ட்விட்டரில் ட்ரெண்டானது. பல்வேறு தமிழ் அமைப்புகளும் விஜய் சேதுபதிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இயக்குனர் பாரதிராஜாவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில், தாங்கள் செய்யவிருக்கும் 800 என்ற படம் பற்றிக் கேள்விப்பட்டேன்.

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனைப் பற்றிய பயோபிக் படமாக அது உருவாகப் போவதாக அறிந்தேன். நம் ஈழத்தமிழ்ப் பிள்ளைகள் செத்து விழுந்த போது பிடில் வாசித்தவர் இந்த முத்தையா. சிங்கள இனவாதத்தை முழுக்க முழுக்க ஆதரித்தவர். விளையாட்டு வீரனாக என்னதான் சாதித்தாலும், தன் சொந்த மக்கள் கொல்லப்பட்டபோது சிரித்து மகிழ்பவர் என்ன சாதித்து என்ன பயன்?

எனவே அவர் படத்தில் அந்தப் படத்தில் நடிப்பதை தவிர்க்க முடியுமா பாருங்கள். தவிர்த்தால் எப்போதும் எம் ஈழ மக்களின் மனதிலும், என் மனதிலும் நன்றியோடு நினைவு கொள்ளப்படுவீர்கள் என்று கூறியிருந்தார். இயக்குனர்கள், சீனு ராமசாமி, சேரன், பாடலாசிரியர் தாமரை உள்பட பலரும் கோரிக்கை வைத்திருந்தனர்.

பல்வேறு தமிழ் அமைப்புகள் கோரிக்கை வைத்துள்ளன. இந்நிலையில் நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் பேஸ்புக்கில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘தமிழ் உணர்வறிந்து கைவிட்டேன் என அவர் நல்ல செய்தி சொல்வார்’ என்று கூறியுள்ளார். இதுபற்றி பார்த்திபன் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

முத்தையா முரளியின் சூழல் பந்தை, ஒத்தையா எதிர்கொள்ளும் வி(சய) சேதுபதி. எதிர்ப்புகள்-எதிர்பார்ப்புகளாக bounce ஆகிவரும் பந்தினை லாவகமாக அடித்து boundary-யைத் தாண்டி சிக்சராக விளாசி,(அதாகப்பட்டது தமிழ் உணர்வறிந்து கைவிட்டேன் என)ஆடியன்ஸ் மட்டுமில்லாமல் அம்பையர்ஸையும் cheers girls போல ஆடவைத்து ஆரவாரத்துடன் ‘தமிழ்மக்கள்’ செல்வந்தர் ஆகிவிடும் வியூகமோ? என்பதென் யூகம்

(காலங்காத்தால…) நடப்பது நன்மையே. so நன்மையே நடக்கும் என நம்புவோம்!- இவ்வாறு கூறியுள்ளார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here