தமிழ் உட்பட 9 மாநில மொழிகளில் தீர்ப்புகள்: உச்சநீதிமன்ற இணையதளத்தில் வெளியீடு

0
256


உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகள் 9 மாநில மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, அதன் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.


மக்களவையில் கேள்வி நேரத்தின்போது ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது:
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகள் தமிழ், தெலுங்கு, கன்னடம், வங்கமொழி, அஸ்ஸாமி, மராத்தி, ஒடியா, உருது, ஹிந்தி ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வருகின்றன. அவை உச்சநீதிமன்றத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. மொழிபெயர்ப்புப் பணிக்காக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது குறித்து ஆய்வு செய்து வருகிறோம். இதற்காகக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.


தொழிலாளர்கள், நிலம் கையகப்படுத்துதல், வாடகைச் சட்டம், சேவைகள், தனிநபர் சட்டம், சமய மற்றும் அறநிலையத் துறை, குற்றவியல் விவகாரங்கள், குடும்பச் சட்டம், சிவில் விவகாரங்கள், விவசாய நிலங்கள் குத்தகை, நுகர்வோர் பாதுகாப்பு உள்ளிட்டவை தொடர்பான விவகாரங்களில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் வழக்குகளின் மீதான தீர்ப்புகள், மாநில மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்படும் என்றார் ரவிசங்கர் பிரசாத்.


 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here