பெரும் பிரச்சினையைச் சந்தித்த பத்மாவதி திரைப்படம் வரும் ஜன.25ஆம் தேதி வெளியாகும் என அந்தப் படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

ராஜபுத்திர சமூகத்தைத் சேர்ந்த “ராணி பத்மினி”யின் வரலாற்றை அடிப்படையாக் கொண்டு ’பத்மாவதி’ என்ற பெயரில் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி, திரைப்படம் எடுத்துள்ளார். இந்தப் படத்தில் ஷாகித் கபூர், ரன்வீர் சிங், தீபிகா படுகோனே உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தில், ராணி பத்மினி மற்றும் டெல்லியை ஆண்ட சுல்தான் அலாவுதீன் கில்ஜி தொடர்பான காட்சிகள் சர்ச்சைக்குரிய வகையில் இடம்பெற்றுள்ளதாகக் கூறி ராஜ்புத் கர்ணி சேனா என்னும் அமைப்பினர், இந்துத்துவா அமைப்பினர் உள்ளிட்டோர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். ராணி பத்மினியாக நடித்துள்ள தீபிகா படுகோனேவின் மூக்கை அறுப்போம் என்றும் ராஜ்புத் கர்ணி சேனா அமைப்பினர் மிரட்டலும் விடுத்து வந்தனர்.

பத்மாவதி திரைப்படத்தின் பெயரை ’பத்மாவத்’ என மாற்றம் செய்தும், சில காட்சிகளில் மாற்றம் செய்தும், யுஏ சான்றிதழுடன் சென்சார் போர்டு அனுமதி வழங்கியது. இதனைத்தொடர்ந்து வருகிற ஜன.25ஆம் தேதி பத்மாவத் படம், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது. இதனிடையே குஜராத், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் படத்தை வெளியிட அம்மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஆனால் உத்தரபிரதேசத்தில் படத்துக்கு எந்த தடையும் இல்லை என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

இதையும் படியுங்கள்: ஒக்கி பேரிடர்: கரம் கோர்ப்போம்; கட்டியணைப்போம்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்