தமிழ்நாட்டில் 10 நாளில் 100 கோடி வசூல் செய்த தர்பார் ?

0
243

ரஜினிகாந்த் நடிப்பில் ஜனவரி 9 ஆம்   தேதி தமிழ்நாடு முழுவதும் சுமார் 800க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியான படம் தர்பார்.இத்திரைப்படத்தில் நயன்தாரா,நிவேதா தாமஸ்,யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர்.

வெளியான தியேட்டர்களில் பெரும் வரவேற்பைப் தர்பார் பெற்றிருந்தால் நான்கு அல்லது ஐந்து நாட்களில் சுலபமாக 100 கோடி வசூலைத் தாண்டியிருக்கும்.ஆனால்,நேற்றுடன்(சனிக்கிழமை) முடிவடைந்த 10 நாட்களில் தர்பார் படம் சுமார் 100 கோடி வசூலைக் கடந்துள்ளது.

நமக்குக் கிடைத்த வசூல் நிலவரங்களின்படி தமிழ்நாட்டில் கடந்த 10 நாட்களில் தர்பார் படம் பெற்ற வசூல் நிலவரம் :

முதல் நாள் – 15.8 கோடி, இரண்டாம் நாள் – 8.6, மூன்றாம் நாள் – 9.6, நான்காம் நாள் மிக அதிகமாக – 14 என வசூலாகியது.

ஐந்தாம் நாள் சற்று மந்தமான  நிலையில் – 8 கோடிகளையும், ஆறாம் நாள் – 8.8, ஏழாம் நாள் – 13.8, எட்டாம் நாள் – 11, ஒன்பதாம் நாள் – 8.5, பத்தாம் நாள் – 9 கோடி என மொத்தமாக 107.1 கோடிகளை தர்பார்  வசூல் செய்துள்ளது.

தமிழ்நாட்டில்  தர்பார் படத்தின் வியாபாரம் சுமார் 60 கோடி எனவும், தற்போது 107 கோடி வசூல் கடந்துள்ள நிலையில் இனி அனைவருக்குமான லாபத் தொகை கிடைத்துவிடும் எனக் கருதப்படுகிறது.

ஏற்கெனவே, செங்கல்பட்டு, சென்னை உள்ளிட்ட ஏரியாக்களில் லாபம் ஆரம்பமாகிவிட்டது என்கிறார்கள். மேலும், இன்னும் ஒரு வாரம் வரை படம் ஓடினாலே மற்ற ஏரியாக்களிலும் குறிப்பிடத்தக்க லாபம் கிடைப்பது உறுதி என்பதுதான் இப்போது வரை உள்ளநிலவரமாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here