(நவம்பர் 6, 2015இல் வெளியான செய்தி)

ஒன்பதாம் வகுப்புல தொடங்குன காதல்., கல்யாணத்துல முடிஞ்சத நினைச்சி சந்தோசப்படாத மனுசங்க யாருங்க இருக்கமுடியும்..? ஆனா இங்க ஒருத்தரு போலிஸ் ஸ்டேசனுக்கு போயி புகார் கொடுத்துட்டு வந்திருக்குறாரு. நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் கிராமத்த சேர்ந்த அன்பரசுவும், வேறொரு பொண்ணும் ஒன்பதாங்கிளாஷ்ல இருந்தே காதலிச்சிருக்காங்க. இப்போ கல்யாணமும் பண்ணிக்கிட்டு சந்தோசமா இருக்குறாங்க., ஜாதி சும்மா வுடுமா..? புறப்பட்டுட்டாரு பொண்ணோட அப்பா, என் பொண்ண சட்டவிரோதமா.. கடத்திக்கிட்டு போயிட்டான் அன்பரசு, என் பொண்ண மீட்டுக் கொடுக்கணும்ன்னு காவல்துறையில் கம்ளையிண்டு கொடுத்துட்டாரு. இப்பத் தெரிஞ்சிருக்குணுமே அன்பரசன் யாருன்னு..? ஆமா, அன்பரசன் தலித் சமூகத்த சேர்ந்தவரு. பொண்ணு ஆதிக்க சமூகத்த சேர்ந்தவங்க, சேர்ந்து வாழ விட்டுருமா சமூகம்..? வழக்கமான கொலை மிரட்டல், குடிசை எரிப்பு , இன்னும் என்னனென்னவோ நடக்கும்., சேந்தமங்கலத்துல உயிரோட இருக்க முடியாத நெலமையில… கோர்ட்டுக்கு போயி வாதாடி.
’ஜாதி இல்லாத வேறொரு நாட்டுக்கு போயி நிம்மதியா வாழுங்கன்னு’ காவல்துறையின் பாதுகாப்போடு, அன்பரசன் ஜோடியை பஸ் ஏத்திவிட உத்தரவு போட்டுக்குறாரு மாவட்ட குற்றவியல் நீதிமன்ற நீதிபதி. ஜாதி மாறி காதலிச்சா , ஒண்ணு ஊரவிட்டு போகனும்., இல்லன்ன இந்த ஒலகத்த விட்டே அனுப்பிடும் ஜாதி. எச்சரிக்க லவ்வர்ஸ்!

சொந்த வூட்டுல, துண்ண தட்ட கழுவ வக்கில்லாத ஆம்பளைங்க வாழுற நாட்டுல, தன் வீட்டு எச்சத்தட்டையும், அழுக்குத் துணிகளையும் , வூட்ட கழுவி, பெருக்கி, சுத்தம் பண்ற வீட்டு வேலைக்கு வரலன்னு பழனியம்மாள் என்ற தலித் பெண்ணை ஜாதி பேரச்சொல்லி அசிங்கமாத்திட்டி, அடியாட்கள வெச்சு பழனியம்மாள தாக்கியிருக்கிறார் தஞ்சாவூரச் சேர்ந்த சாமிக்கண்ணு SC/ST வன்கொடுமை வழக்குல கைது செய்யப்பட்டிருக்கிறார் சாமிக்கண்ணு. சும்மாவா சொன்னாரு அம்பேத்கரு… ஜாதி என்பது சுவரோ , கோட்டையோ இல்ல அது ஒரு மன நோய்யின்னு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here