தமிழ்நாட்டில் ஊரடங்கு தளர்த்தப்படாது: தமிழக அரசு முடிவு

0
363

மே மூன்றாம் தேதிவரை தமிழ்நாட்டில் தற்போதுள்ள நிலையே நீடிக்கும் என தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.

கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள பகுதிகளில் ஏப்ரல் 20 ஆம் தேதிக்கு பிறகு ஊரடங்கு தளர்த்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது.

மேலும், ஏப்ரல் 20ஆம் தேதி முதல் தொழிற்சாலைகளுக்கு சில தளர்வுகளை அளிக்க விருப்பதாக மத்திய அரசு கடந்த 15 ஆம் தேதியன்று தெரிவித்திருந்தது. எந்தெந்த தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் இயங்கலாம் என்பது குறித்து மாநில அரசுகள் முடிவெடுக்கலாம் எனவும் கூறப்பட்டிருந்தது.

இது தொடர்பாக இன்று(திங்கக்கிழமை) தலைமைச் செயலகத்தில் மூத்த அமைச்சர்களுடன் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். அப்போது, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், எந்தெந்த பகுதிகளில் ஊரடங்கை தளர்த்தலாம் என ஆலோசிக்கப்பட்டது.

இந்த ஆலோசனைக் கூட்டம் நிறைவடைந்த பின்னர், தமிழக அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதில் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு தளர்த்தப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

‘கொரோனா மேலும் பரவுவதை தடுப்பதற்கு கடும் நடவடிக்கையை தொடர்ந்து தீவிரப்படுத்த வேண்டி உள்ளதால் ஊரடங்கு மே 3 ஆம் தேதி வரை தளர்வு இல்லை. அத்தியாவசிய பணிகள் மற்றும் சேவைகளுக்கு அளிக்கப்பட்ட விதிவிலக்கு தொடரும். நோய்த்தொற்று குறைந்தால், வல்லுனர் குழுவின் ஆலோசனைக்குப் பிறகு உரிய முடிவு எடுக்கப்படும்’ என தமிழக அரசு கூறியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here