தமிழகத்தில் 18775 கூட்டுறவுச் சங்கங்களுக்கு நான்கு கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது.

இது குறித்து தேர்தல் ஆணையர் ராஜேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கூட்டுறவுத்துறை, பால் உற்பத்தி மற்றும் பால் பண்ணை மேம்பாட்டுத்துறை, மீன் வளத்துறை, கைத்தறி மற்றும் துணிநூல் துறை, கூட்டுறவு வீட்டுவசதித் துறை, பனைப்பொருள் வளர்ச்சி வாரியம், கதர் கிராம தொழில் வாரியம், தொழில் மற்றும் தொழில் வணிகத்துறை, கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப் பணிகள் துறை, வேளாண்மைத்துறை, சமூக நலத்துறை, ஊரக வளர்ச்சி பஞ்சாயத்துராஜ் துறை, பட்டு வளர்ச்சித்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்துறை, சர்க்கரைத்துறை ஆகிய 15 அரசு துறைகளின் கட்டுப்பாட்டின்கீழ் வரும் 18,775 சங்கங்களின் நிர்வாகக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல்களை கூட்டுறவு தேர்தல் ஆணையம் நடத்தவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

முதலில் 18,435 தொடக்கக் கூட்டுறவு சங்கங்களுக்கு நிர்வாகக் குழு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க ஏப்ரல் 2, 7, 16 மற்றும் 23 ஆகிய தேதிகளில் நான்கு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவுள்ளதாகவும், இதற்கான வாக்கு எண்ணிக்கை முறையே ஒவ்வொரு கட்டத்துக்கும் ஏப்ரல் 3, 9, 17 மற்றும் 24 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்தத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படும் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் தலைவர், துணைத் தலைவர் ஆகியோரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் முறையே ஏப்ரல் 7, 13, 21 மற்றும் 28 ஆகிய தேதிகளில் நடைபெறும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்: 35 கோடி குழந்தைகள் போர் நடைபெறும் பகுதிகளில் தவிப்பு – Save the Children

[orc]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here