சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் தமிழிசையிடம் கேள்வி கேட்ட ஆட்டோ ஓட்டுநரை பாஜகவினர் மிரட்டி இழுத்துச் சென்று அடித்து உதைத்துள்ளனர்.

சென்னை சைதாப்பேட்டையில் விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களிடம் பேசிக் கொண்டிருந்த போது, அவருக்குப் பின்னால் நின்று கொண்டிருந்த ஒரு ஆட்டோ ஓட்டுநர், பெட்ரோல், டீசல் விலை இப்படி கடுமையாக உயர்ந்து வருகிறதே என்று கேள்வி எழுப்பினார்.

தமிழிசைக்கு பின்னால் நின்று கொண்டிருந்த பாஜக பிரமுகர், ஆட்டோ ஓட்டுநரை பின்னால் தள்ளி கேமராவில் இருந்து அப்புறப்படுத்த, அங்கிருந்த பாஜகவினர் அவரை தாக்கினர். தனக்குப் பின்னால் ஒருவர் தாக்கப்படுவதை அறிந்தும், அறியாதது போல சிரித்தபடியே நின்றிருந்தார் தமிழிசை சௌந்தரராஜன்.

தினமும் முழு நேரமும் வேலை செய்தாலும் ஆட்டோ வாடகை, பெட்ரோல் விலை போக ரூ.300 தான் சம்பாதிக்க முடிகிறது. இதை வைத்துக் குடும்பம் நடத்துவது எப்படி? ஒரு சில நாட்கள் ஆட்டோ வாடகைக்குக் கூட சம்பாதிக்க முடியாமல் போகிறது, இதைக் கேட்டால் என்னை அடிக்கிறார்கள் என்று தாக்குதலுக்கு உள்ளான ஆட்டோ ஓட்டுநர் கதிர் கூறினார்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்