தமிழறிஞரும், பேராசிரியருமான மா.நன்னன் (94), சென்னையில் செவ்வாய்க்கிழமை (இன்று) காலமானார். கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகேயுள்ள சாத்துக்குடல் எனும் ஊரில் பிறந்தவரான மா.நன்னன், தமிழ் கட்டுரைகள், பாடநூல்கள் உட்பட 70க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். தமிழ் மீது கொண்ட பற்றால் தனது இயற்பெயரான திருஞானசம்பந்தனை நன்னன் என மாற்றிக்கொண்டார். வெள்ளையனே வெளியேறு, இந்தி எதிர்ப்பு உள்ளிட்ட போராட்டங்களிலும் கலந்துகொண்டுள்ளார். எழுத்தறிவித்தலில் ‘நன்னன் முறை’ என்ற புதிய முறையையே உருவாக்கியவர். உயர்நிலைப் பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆசிரியராகவும், தமிழ் வளர்ச்சித் துறையின் இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். பெரியார் விருது, தமிழ்ச்செம்மல் விருது, திரு.வி.க. விருது உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

இதையும் படியுங்கள்: துல்லியம், நியாயம், ஆதாரம்: ஊடகவியலின் அடிப்படைகள்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்