தமிழறிஞர், சிலம்பொலி செல்லப்பன் இன்று(சனிக்கிழமை) காலை காலமானார். அவருக்கு வயது 91.

தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன், நாமக்கல் மாவட்டம் சிவியாம் பாளையத்தில் பிறந்தவர். கணித ஆசிரியராகப் பணியைத் தொடங்கிய இவர், தமிழில் முனைவர் பட்டம் பெற்றவர். தமிழிலக்கியங்களை மேடையிலும் நூல்கள் வாயிலாகவும் பரப்பியவர். சிலப்பதிகாரம் பற்றிய இவரது சொற்பொழிவுகளை அடுத்து, ’சிலம்பொலி’ என்னும் சிறப்புப்பெயர் வழங்கப்பட்டது. பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, சிலப்பதிகாரம், மணிமேகலை,பெருங்கதை, சீறாப்புராணம், இராவணக் காவியம் ஆகிய இலக்கியங்களைப் பற்றி இவர் ஆற்றிய தொடர்பொழிவுகள் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவை.

60 ஆண்டுகளுக்கு மேலாக சிலப்பதிகாரத்தை பட்டி தொட்டி எங்கும் பரப்பியவர். சிலம்பொலி, நல்ல குறுந்தொகையில் நானிலம், பெருங்கதை ஆராய்ச்சி, சங்க இலக்கிய தேன் உள்பட பல நூல்களை எழுதியும், ஆயிரத்துக்கு மேற்பட்ட ஆய்வு கட்டுரைகளையும் எழுதியுள்ளார். 

உலகத் தமிழ் மாநாட்டு உதவி அலுவலர், தமிழ் வளர்ச்சி இயக்குநர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் என பல பதவிகளை வகித்துள்ள இவர், தமிழக அரசின் பாவேந்தர் பாரதிதாசன் விருது உட்பட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். சென்னை அடையாறில் வசித்து வந்த இவர், வயது மூப்பு காரணமாக இன்று காலை காலமானார். 

60 ஆண்டுகளுக்கு மேலாக சிலப்பதிகாரத்தை பட்டி தொட்டி எங்கும் பரப்பியவர் சிலம்பொலி, பெருங்கதை ஆராய்ச்சி, சங்க இலக்கிய தேன் உள்பட பல நூல்களை எழுதியவர் ஆயிரத்துக்கு மேற்பட்ட ஆய்வு கட்டுரைகளை எழுதியுள்ளார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here