தமிழக முதல்நாள் வசூலில் கபாலி, விவேகம் படங்களை மெர்சல் முந்தியதா?

0
446
Vijay & Kajal Aggarwal

முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகும் போது படம் நன்றாக இருக்கிறதா இல்லையா என்பதைத் தாண்டி, படங்களின் வசூலும் முக்கிய பேசு பொருளாகிறது. விஜய் படம் வெளியாகும் போது, அஜித் படத்தின் வசூலை முந்தியதா என்பதே அதிகம் பேரால் கவனிக்கப்படும் விஷயம். அதேபோல் அஜித் படங்கள் வெளியாகும் போது விஜய் படத்தை வென்றதா என்பதே முக்கியம்.

மெர்சல் படத்தின் வசூல் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகாத நிலையில் யூகத்தின் அடிப்படையில் தமிழக வசூல் குறித்த நிலவரம் வெளியாகியிருக்கிறது. முதல்நாளில் கபாலி தமிழகத்தில் 21.5 கோடிகளை வசூலித்ததாகவும், விவேகம் 17 கோடிகள் வசூலித்ததாகவும் கூறப்பட்டது. மெர்சல் இவ்விரு படங்களையும் கடந்து 22 கோடிகளை தமிழகத்தில் முதல்நாளில் வசூலித்ததாக செய்திகள் வெளியிட்டுள்ளனர்.

முன்னணி நடிகர்களின் படங்கள் குறித்த வசூல் நிலவரம் எப்போதுமே முழுமையானதில்லை. அரசு நிர்ணயித்த டிக்கெட் கட்டணத்தை வைத்தே இந்த வசூல் கணக்கு போடப்படுகிறது. ஆனால், டிக்கெட் கட்டணத்தைவிட அதிகளவில் திரையரங்குகள் வசூலிக்கின்றன. அதனடிப்படையில் பார்த்தால் கபாலியே இன்னும் முதலிடத்தில் இருப்பதாக கருத வேண்டியுள்ளது. அந்தப் படத்துக்கே முதல்நாளில் இரண்டாயிரம் ரூபாய்வரை ஒரு டிக்கெட்டுக்கு கொள்ளையடித்தனர். அதனுடன் ஒப்பிடுகையில் விவேகம், மெர்சல் கொள்ளை குறைவு.

திரையரங்கு கட்டணம் 25 சதவீதத்துக்கு மேல் உயர்த்தப்பட்டிருப்பதும் மெர்சலின் அதிகபடி வசூலுக்கு ஒரு காரணம். காலா வெளியாகும் போது இந்த வசூல் சாதனைகள் மீண்டும் முறியடிக்கப்படும்.

சாதனைகள் என்பதே முறியடிக்கத்தானே.

இதையும் படியுங்கள் : காற்று மாசுபாட்டினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 90 லட்சம்; இந்தியாவில்தான் அதிகம்

இதையும் படியுங்கள் : கதிராமங்கலம்: 152வது நாளாக நீடிக்கும் போராட்டம்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்