நெடுந்தீவு அருகே எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, தமிழக மீனவர்கள் ஐந்து பேரை இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர். மேலும் மீனவர்கள் பயன்படுத்திய படகினையும் இலங்கைக் கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள், காங்கேசன் கடற்படை முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்து இரண்டு நாட்களே ஆகியுள்ளநிலையில், மீனவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை எச்சரிக்கை : தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகளை பயன்படுத்தி மீன் பிடிக்கும் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவார்கள் என இலங்கை ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதையும் படியுங்கள் : ஓ அஞ்சலி… ஓ ஜெய்… உருகிய காதல் நெஞ்சங்கள்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்