தமிழக பாஜக தலைவர் பதவியிலிருந்து தமிழிசை நீக்கப்படுவாரா?

0
389

தமிழக பாஜக தலைவர் தமிழிசை நீக்கப்படுவாரா என்று அக்கட்சியின் தமிழக விவகாரங்களுக்கு பொறுப்பு வகிக்கும் பொதுச் செயலாளர் முரளிதர ராவ் டிவிட்டரில் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழக பாஜக தலைவராக தமிழிசை சவுந்தரராஜன் பதவி வகித்து வருகிறார். சமீப காலமாக தமிழிசை சவுந்தரராஜன் அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டு வேறொருவர் அமர்த்தப்படலாம் என்ற செய்திகள் வெளியாயின .

இதையடுத்து, பாஜக தலைவர் தமிழிசையின் பதவிக்காலம் 2019-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை இருக்கிறது என்றும் வேறொரு தலைவரை நியமிப்பது குறித்து கட்சித் தலைமை தான் முடிவெடுக்கும் என்றும் தமிழிசை தரப்பில் கூறப்பட்டது

இது குறித்து தமிழக பாஜக விவகார பொதுச் செயலாளர் முரளிதர ராவ் தன் டிவிட்டர் பக்கத்தில்
“பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவிடம் நான் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளேன் . தமிழக பாஜக தலைவர் பதவியில் மாற்றம் வரும் என ஒரு சில ஊடகங்களில் வெளியாகும் செய்தியில் உண்மையில்லை. அந்த கருத்துகள் உண்மைக்கு அப்பாற்பட்டது மேலும் விஷமத் தன்மை வாய்ந்தது” என்று பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here