தமிழகத்தில் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் யோக வகுப்புகள் தொடங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை பல்கலைக்கழகத்தில் நடந்த ஆசிரியர்கள் பணி ஆணை வழங்கும் விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், தனது தலைமையிலான அரசு கல்வியில் புரட்சி செய்து வருகிறது என்றார். மேலும் பேசிய அவர், கடந்த ஆறு ஆண்டுகளில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முழு நேர ஆசிரியரிகளாக பணியமர்த்தப்பட்டுள்ளனர் என்றார்.

eps

மாணவர்களின் திறன்களை வளர்க்கும் வகையில் கலைத்திருவிழா அறிமுகப்படுத்தப்படும் என்றும், அனைத்துப் பள்ளிகளிலும் யோக வகுப்புகள் தொடங்கப்படும் என்றும் பேசினார். ஆண்டுதோறும் கல்வி சுற்றுலாவுக்கு, 100 மாணவர்கள் வெளிநாடு அழைத்து செல்லப்படுவார்கள் என்றார்.

இதையும் படியுங்கள்: என் உடலமைப்பை நானே வெறுக்கிறேன்… இலியானாவுக்கு வந்த புது வியாதி

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்