2019 -20ஆம் நிதி ஆண்டிற்கான தமிழக பட்ஜெட்டை சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் சற்றுமுன் தாக்கல் செய்தார்.

இது துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் 8வது முறையாக தாக்கல் செய்யும் பட்ஜெட் ஆகும். நடைபெறவிருக்கும் மக்களவை தேர்தல் காரணமாக முன்கூட்டியே பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

இதுவரை அதன் சில முக்கிய அம்சங்கள் வருமாறு:

• மொத்தம் 2000 மின்சார பேருந்துகள் வாங்கப்படும். சென்னை, கோவை, மதுரையில் முதற்கட்டமாக 500 மின்சார பேருந்துகள் இயக்கப்படும்.

• உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அரசு தீவிர முனைப்பு காட்டி வருகிறது.

• தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறைக்கு நடப்பாண்டில் ரூ403.76 கோடி ஒதுக்கீடு.

• நிரந்தர வெள்ளத்தடுப்பு பணிகளுக்கு ரூ.284 கோடி ஒதுக்கீடு.

• ஆயுள் காப்பீடு திட்டத்தின் மூலம் இயற்கை மரணத்திற்கு ரூ.2 லட்சம்.

• விபத்து மூலம் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு ரூ.4 லட்சம்.

• சிறுபான்மையினர் நலத்துறைக்கு ரூ.14.99 கோடி ஒதுக்கீடு.

• வரும் நிதி ஆண்டில் 20 ஆயிரம் பசுமை வீடுகளுக்காக ரூ420 கோடி ஒதுக்கீடு.

• பிரதம மந்திரி திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் வீடு கட்ட திட்டம்.

• அனைத்து கிராமங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.1200 கோடி ஒதுக்கீடு.

• திருமுடிவாக்கம், ஆலத்தூர் தொழிற்பேட்டைகள் விரிவாக்கப்படும்.

• மின்சாரத்துறைக்காக ரூ.18,560 கோடி ஒதுக்கீடு.

• ரூ100 கோடி மதிப்பில் புதிய உறைவிந்து உற்பத்தி நிலையம் அமைக்கப்படும்.

• சென்னை மாநகராட்சியின் புதிய திட கழிவு மேலாண்மை திட்டத்திற்கு விரைவில் அனுமதி.

• அனைத்து துறைகளையும் சேர்த்து 2 லட்சத்து 63 ஆயிரத்து 828 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.

• 2020 மார்ச் 31ல் தமிழக அரசின் கடன் ரூ.3.97 லட்சம் கோடியாக இருக்கும். கடந்தாண்டு : ரூ.3.55 லட்சம் கோடி

• ஏழை, நடுத்தர மக்கள் வீட்டு வசதியைப் பெற புதிய கொள்கை உருவாக்கப்பட்டு விரைவில் அறிவிக்கப்படும்.

• தனியார் பள்ளிகளுடன் ஒப்பிடுகையில் அசுப்பள்ளி மாணவர்கள் வேகமாக முன்னேறி வருகின்றனர். 10,11,12 வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு ஊக்கதொகை ரூ.5000 தொடர்ந்து
வழங்கப்படும்.

• கஜா புயலினால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் மேம்பாட்டுக்காக ரூ.2,361 கோடி ஒதுக்கீடு.

• ஜிஎஸ்டி மூலம் கடந்த 9 மாதங்களில் தமிழக அரசுக்கு கிடைத்த வருவாய் ரூ.31 ஆயிரம் கோடி.

• முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கான கட்டணத்தை திருப்பி அளிக்க ரூ.460.25 கோடி நிதி.

• தமிழகத்தில் 2,698 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளது.

• தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்க்கை 7,896ல் இருந்து 5,198 ஆக குறைப்பு.

• இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறைக்கு ரூ.168.27 கோடி ஒதுக்கீடு.

• ஜெர்மன் வளர்ச்சி வங்கியின் உதவியுடன் ரூ.5,890 கோடி செலவில் 12,000 புதிய பிஎஸ்-6 தரத்திலான பேருந்துகள்.

• டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு திட்டத்திற்கு 959.21கோடி நிதி.

• பெருங்குடி, கொடுங்கையூர் குப்பைக் கிடங்கு கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்க ரூ.5,259 கோடி ஒதுக்கீடு.

• மடிக்கணினி வழங்கும் திட்டத்திற்கு 1362.27 கோடி நிதி.

• பி.எஸ் விதிகளின்படி 12 ஆயிரம் பேருந்துகள் வாங்கப்படும்.

• மொத்தம் 2000 மின்சார பேருந்துகள் வாங்கப்படும்.

• டீசல் மானியம் உட்பட போக்குவரத்து துறைக்கு ரூ.1297 கோடி நிதி.

• 2019-20 நிதியாண்டில் இந்து சமய அறநிலைய துறைக்குரூ281.86கோடி நிதி.

• 2019-20 முதலீட்டு மானியமாக ரூ2500 கோடி நிதி ஒதுக்கீடு.

• சென்னை தவிர்த்து இதர நகரங்களில் வீட்டு வசதியை உருவாக்க 5000 கோடி மதிப்பில் ஆசிய வங்கிக் கடன் கோரப்படும்.

• விவசாயிகளுக்கான மின்சார விநியோக மானியத்திற்கு8 8018 கோடி நிதி.

• பிற்படுத்தப்பட்டோர் நல துறைக்கு ரூ. 911.47 கோடி நிதி ஒதுக்கீடு.

• தமிழ்நாடு நிலையான நகர்ப்புற வளர்ச்சி திட்டத்திற்கு ரூ.836.39 கோடி நிதி ஒதுக்கீடு.

• உணவு மானியத்திற்கு ரூ6000 கோடி நிதி ஒதுக்கீடு.

• மீனம்பாக்கம்-கிளாம்பாக்கம்(வண்டலூர்) இடையே மேட்ரோ ரயில் இயக்குவதற்கான சாத்தியக் கூறுகள் பற்றி ஆய்வு செய்யபடுகிறது.

• பல்வேறு திருமண நிதியுதவித் திட்டங்கலுக்காக 726.32 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

• பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்துக்கு ரூ.140.11 கோடி ஒதுக்கீடு.

• ரயில்வே மேம்பாலங்கள் அமைக்க ரூ.726.62 கோடி நிதி ஒதுக்கீடு.

• தொழிற்வளர்ச்சிக்கு ரூ 2747.96 கோடி நிதி ஒதுக்கீடு.

• சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறைக்கு ரூ476.26 கோடி நிதி ஒதுக்கீடு.

• கைத்தறி உதவித் திட்டத்திற்கு ரூ.40 கோடி ஒதுக்கீடு.

• மானிய விலை இருசக்கரவாகன திட்டத்திற்கு ரூ250 கோடி நிதி ஒதுக்கீடு.

• சிறுபான்மையினர் நலத்துறைக்கு வரும் நிதியாண்டில் ரூ14.99 கோடி நிதி ஒதுக்கீடு.

• ஆதி திராவிட மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு 20 விடுதிகள் கட்ட ரூ.40 கோடி நிதி ஒதுக்கீடு.

• ஆதி திராவிட மற்றும் பழங்குடியின மாணவர்கள் உதவித்தொகைக்கு ரூ. 1857.13கோடி நிதி ஒதுக்கீடு.

• உலக வங்கியின் கடன் ரூ2685 கோடி நிதி உதவியுடன் தமிழ்நாட்டு சுகாதார சீர்மைப்புத் திட்டம் விரைவில் உருவாக்கப்படும்.

• ரூ38 ஆயிரம் கோடி செலவில் 20 புதிய தொழிற்பயிற்சி நிறுவனங்கள் அமைக்கப்படும்.

• தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்திற்கு ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு.

• விலையில்லா வெள்ளாடுகள், செம்மறியாடுகள் வழங்கும் திட்டத்தில் இதுவரை, 8.72 லட்சம் ஏழைப் பெண்கள் பயனடைந்துள்ளனர்.

• புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டத்திற்காக ₹1,772 கோடி ஒதுக்கீடு.

• வரியில்லாத வருவாய் ரூ13326.91 கோடியாக இருப்பு வைப்பு.

• சென்னையில் குடிசையில் மற்றும் சாலையில் வசிப்பவர்களுக்கு ரூ 38 ஆயிரம் கோடி செலவில் வீடுகள் கட்டித் தரப்படும்.

• வறுமை ஒழிப்புத் திட்டங்களுக்கு ரூ1031 கோடி நிதி ஒதுக்கீடு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here