1.தமிழக நீதிமன்றங்களில் பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை 37 சதவிகிதமாக உள்ளது என டெல்லியை மையமாகக் கொண்டு செயல்படும் சட்டத்துறையைச் சார்ந்த நிறுவனம் நடத்திய ஆய்வறிக்கையில் தெரிய வந்துள்ளது.

2.தற்போது பெண்கள், அனைத்துத் துறையிலும் ஆண்களுக்கு சமமாக வளர்ச்சியடைந்து வருகின்றனர். அதேபோன்று நீதித்துறையிலும் அவர்களது வளர்ச்சி விகிதம் உயர்ந்திருந்தாலும், சில மாநிலங்களில் பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது.

3.உச்சநீதிமன்றம் தொடங்கப்பட்ட 1950ஆம் ஆண்டு முதல் இதுவரை பெண் நீதிபதிகளாக ஆறு பேர் மட்டுமே இருந்துள்ளனர். தற்போது உச்சநீதிமன்றத்தில் மொத்தமுள்ள 25 நீதிபதிகளில் ஒருவர் மட்டுமே பெண் நீதிபதி. இந்தியாவில் மொத்தமுள்ள நீதிபதிகளின் எண்ணிக்கையில் பெண்கள் 10 சதவீதம் பேர் மட்டுமே நீதிபதிகளாகவுள்ளனர். மேலும் மொத்த உயர்நீதிமன்றங்களில் எண்ணிக்கையில் எட்டு மாநில உயர்நீதிமன்றங்களில் நீதிபதி பதவிகளில் பெண்கள் ஒருவர்கூட இல்லை.

4.இந்தியாவைப் பொறுத்தவரையில் மேகாலாயா மாநில நீதிமன்றங்களில் பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை 73.8 சதவிகிதமாக உள்ளது. இந்தியாவிலேயே இங்குதான் நீதிபதி பெண்கள் அதிகம் உள்ளனர். இதனைத்தொடர்ந்து, கோவா மாநிலத்தில் 65.9 சதவிதம், சிக்கிம் மாநிலத்தில் 64.7 சதவிகிதம் பேர் பெண்களாவர். அதேபோன்று பீகார் மாநிலத்தில் 11.5 சதவிதம்; ஜார்க்கண்டில் 13.9 சதவிகிதம், குஜராத்தில் 15.1 சதவிகிதம், ஜம்மு காஷ்மீரில் 18.6 சதவிகிதம் பேர் மட்டுமே நீதிபதி பதவிகளில் உள்ளனர்.

5.தமிழகத்தைப் பொறுத்தவரையில், மாவட்ட நீதிபதியாகவுள்ள 182 பேரில் 63 பேர் (35.16%) பெண்கள். அதேபோன்று, சிவில் நீதிபதி (சீனியர் டிவிசன்) பதவிகளில் 280 பேரில் 99 பேரும், (35.71%), சிவில் நீதிபதி (ஜூனியர் டிவிசன்) பதவிகளில் 414 பேரில் 155 பேரும் (37.68%); மற்ற பிரிவுகளில் 77 பேரில் 31 (40.25) பேரும் உள்ளனர்.

நன்றி: indiaspend

இதையும் படியுங்கள்: உலக தண்ணீர் தினம் : 84.4 கோடி மக்கள் தண்ணீர் இல்லாமல் அவதி

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்