ஆளுநர் உரையை புறக்கணித்து ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தோம் என எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தை எதிர்த்து வெளிநடப்பு - முக ஸ்டாலின்


தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் (ஜன-6) இன்று காலை 10 மணிக்கு கூடியது. இந்த கூட்டத்தில் கவர்னர் பன்வாரிலால் புரோஹித் தொடங்கி வைத்தார்.

கூட்டம் தொடங்கியதும் எதிர்க்கட்சி தலைவர் முக ஸ்டாலின் எழுந்து திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம் குறித்து பேச வாய்ப்பளிக்குமாறு கோரினார். ஆனால், கவர்னர் மறுக்கவே, தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் வெளிநடப்பு செய்தன.

அதன்பின், தி.மு.க. தலைவர் மு.க. டாலின்செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து பேச அனுமதிக்காததால் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர். தமிழக ஆளுநர் உரையால் நாட்டில் எந்த தாக்கமும் ஏற்படப்போவதில்லை.
7 பேர் விடுதலைக்கு ஆளுநர் இதுவரை பதில் அளிக்கவில்லை. தமிழகத்தில் வேலைவாய்ப்பு, வளர்ச்சி இல்லை. தமிழகத்தின் கடன் தொகை ரூ.4 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது என தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here