தமிழக காவல்துறையில் 24 டி.எஸ்.பி.க்கள் பணியிட மாற்றம்

0
249

தமிழக காவல்துறையில் 24 டி.எஸ்.பி.க்களை பணியிட மாற்றம் செய்து டிஜிபி ஜே.கே.திரிபாதி உத்தரவிட்டார்.

இது குறித்த விவரம்:

தமிழக காவல்துறையில் நிர்வாக வசதிக்காகவும், விருப்பத்தின் அடிப்படையிலும், பணியில் ஒழுங்கீனமாக இருந்தாலும் அதிகாரிகள் அவ்வப்போது பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி, தமிழக காவல்துறையில் 24 டிஎஸ்பி.க்களை பணியிட மாற்றம் செய்து சட்டம்,  ஒழுங்கு டிஜிபி ஜே.கே.திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.

இதில் முக்கியமாக மதுரை அண்ணாநகர் உதவி ஆணையர் ஆர்.வேணுகோபால் ராஜபாளையத்துக்கும், விழுப்புரம் டிஎஸ்பி வி.வி.திருமால் காத்திருப்போர் பட்டியலுக்கும், கடலூர் மாவட்ட குற்ற ஆவணக் காப்பகப் பிரிவு டிஎஸ்பி பி.பழனி, விழுப்புரம் போதை தடுப்புப் பிரிவுக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.  பணியிட மாற்றம் செய்யப்பட்ட 24 டிஎஸ்பி.க்களும் ஓரிரு நாள்களில் புதிய பொறுப்பை ஏற்பார்கள் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

Courtesy: DN

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here