இலங்கை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்த தலைவர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து முன்னெப்போதும் இல்லாத வகையில் கடுமையான அடக்குமுறையைக் காவல்துறை கையாண்டுதுள்ளதாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில பொதுச் செயலாளர் எம்.நிஜாம் முகைதீன் குற்றம் சாட்டியுள்ளார்.

இதையும் படியுங்கள் : ’ஜிஎஸ்டியால் பாதிக்கப்போவது லட்சக்கணக்காண அன்றாடங்காச்சிகள்தான்’

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

இலங்கை முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 8வது நினைவு தினத்தையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் மே17 இயக்கம் சார்பில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், சென்னை மாநகர காவல்துறை அந்த நிகழ்ச்சிக்கு தடை விதித்ததோடு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டவர்கள் மீது கடுமையான அத்துமீறலைக் கையாண்டுள்ளது. நினைவேந்தல் நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்த தலைவர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து முன்னெப்போதும் இல்லாத வகையில் கடுமையான அடக்குமுறையைக் காவல்துறை
கையாண்டுள்ளது. இதனை எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன். கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்வதோடு அவர்கள் மீதான வழக்குகளைத் திரும்பப்பெற வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.

இதையும் படியுங்கள் : ஆதரவும் எதிர்ப்பும் கலந்த ரஜினி அரசியல்

சமீபகாலமாக தமிழக காவல்துறையின் அடக்குமுறை அதிகமாகிக்கொண்டே செல்கின்றது. டாஸ்மாக் மதுபானக்கடைக்கு எதிராக போராடுபவர்கள் மீது
நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையிலும், காவல்துறை அந்த உத்தரவினை மதிக்காமல் டாஸ்மாக் கடைக்கு எதிராக போராடும் பொதுமக்கள் மீது அத்துமீறலை கையாண்டு வருகின்றது. பெண்கள் மற்றும் குழந்தைகளின் மீதும் தனது அடக்குமுறையை ஏவி வருகின்றது. அதோடு அவர்கள் மீது ஜாமீனில் வெளிவர முடியாத அளவுக்கு கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவர்களை ஒடுக்கி வருகின்றது. காவல்துறையின் இதுபோன்ற நடவடிக்கைகள் கடும் கண்டனத்திற்குரியது. இத்தகைய அடக்குமுறைகளை தமிழக அரசு தடுத்து நிறுத்த முன்வர வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்