தமிழ்நாட்டில் ஏற்பட்ட மழை, வெள்ள பாதிப்பு குறித்து ஆளுநர் வி.என்.ரவியை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
வங்கக்கடலில் தொடரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக,தமிழகத்தில் சமீப காலமாக பல மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.இந்த மழையால் பல மாவட்டங்கள் பாதிப்புக்குள்ளாகி உள்ள நிலையில்,மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், டெல்டா மாவட்டங்களில் பயிர்கள் சேதமடைந்துள்ளதால் விவசாயிகளும் இழப்புகளை சந்தித்துள்ளனர்.இதனால்,மழை வெள்ள பாதிப்பு நிவாரண பணிகளுக்கு மத்திய அரசிடம் நிவாரண நிதி கேட்டுள்ளது.
இந்நிலையில், மழை, வெள்ள பாதிப்பு தொடர்பாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களை,சென்னை, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தற்போது சந்தித்து பேசி வருகிறார். மேலும்,நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் தமிழக அரசின் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கும்படி ஆளுநரிடம் முதல்வர் வலியுறுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.