அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டுமென்பது மநீமவின் செயல்திட்டங்களுள் ஒன்று அதை தமிழகத்திலும் நிகழ்ந்தேறி இருக்கிறது கமல் ட்விட்..

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற தமிழ்நாடு அரசின் திட்டத்திற்கு பல்வேறு தரப்பிலிருந்து ஆதரவு மற்றும் எதிர்ப்பு குரல்கள் தொடர்ந்து வருகின்றன. அந்த வகையில் தற்போது நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ள ட்வீட் பதிவில்; அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டுமென்பது மநீமவின் செயல்திட்டங்களுள் ஒன்று. தேர்தல் வாக்குறுதியிலும் குறிப்பிட்டிருந்தோம்.

கேரளத்தில் முன்னரே சாத்தியமானது இப்போது தமிழகத்திலும் நிகழ்ந்தேறி இருக்கிறது. இந்த மாற்றம் இந்தியாவெங்கும் நிகழ வேண்டும். தமிழக அரசுக்கு பாராட்டுக்கள் என குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here