பாரதிய ஜனதா கட்சி தேசியச் செயலாளர் ஹெச்.ராஜாவுக்கு எதிராக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டம் வலுவடைந்து வருகிறது.

திரிபுராவில் லெனின் சிலை இடிக்கப்பட்டதுபோல் தமிழகத்தில் தந்தை பெரியார் சிலை உடைக்கப்படும் என பாரதிய ஜனதா கட்சியின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதற்கு எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து அந்தப் பதிவை நீக்கிவிட்டார்.

ஹெச்.ராஜாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தின் சென்னை, மதுரை, சேலம், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் போராட்டம் வலுவடைந்து வருகிறது. சென்னை அண்ணா சாலையில் திமுக, தேமுதிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, திராவிட இயக்கங்கள் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதேபோன்று, சென்னை தி.நகரிலுள்ள பாஜக தலைமை அலுவலகத்தை புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியினர் முற்றுகையிட முயற்சித்தனர். அவர்களைப் போலீசார் தடுத்து நிறுத்தினர். கோவை காந்திபுரத்தில் உள்ள பெரியார் சிலை முன்பு, இந்திய மாணவ சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படியுங்கள்: 35 கோடி குழந்தைகள் போர் நடைபெறும் பகுதிகளில் தவிப்பு – Save the Children

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்