உலகின் பல்வேறு நாடுகளிலும், இந்தியாவில் கேரளாவிலும் ரமலான் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் தமிழகம் முழுவதும் ரமலான் பண்டிகை நாளை (சனிக்கிழமை) கொண்டாடப்படும்.

உலகில் அனைத்து இஸ்லாமியர்களின் 5 கடமைகளில் முக்கியமானது ரமலான் எனப்படும் நோன்பு. பசித்திருப்பவர்களின் நிலைமையை அறியவும், அவர்களைப் போலவே பட்டினியின் கொடுமையை தெரிந்து கொள்ளவும் 30 நாட்கள் பட்டினியாக இருந்து நோன்பு வைத்துக் கொள்வது வழக்கம். அதன்படி நோன்பு வைத்திருப்பவர்கள் ஜக்காத் எனப்படும் கொடை கொடுக்கவேண்டும் என இஸ்லாமியர்களின் புனித நூலான அல் குர்ஆன் தெரிவித்துள்ளது.

அதன்பேரில் கடந்த ஒருமாத காலமாக நோன்பு வைத்திருந்த இஸ்லாமியப் பெருமக்கள் நேற்றுடன் அதனை முடித்துக் கொண்டனர். இஸ்லாமியர்கள் பிறைக்கணக்குப்படி பண்டிகையை கொண்டாடுவார்கள். அதன்படி சவுதி அரேபியா உள்ளிட்ட 15 நாடுகளிலும், இந்தியாவில் கேரளாவில் நேற்றிரவு பிறை காணமுடிந்ததால் இன்று ரமலான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. மாலை வரை பிறை தெரியாததால் தமிழக அரசின் தலைமை காஜி சலாஹுத்தின் முஹம்மத் அய்யூபி நோன்பு இன்றும் தொடரும் என அறிவித்து ரமலான் பண்டிகை நாளை (சனிக்கிழமை) கொண்டாடப்படும் என அறிவித்தார்.

இதனிடையே தமிழகத்திலும் புதுவையிலும் பள்ளிகளுக்கு அறிவிக்கப்பட்ட விடுமுறை திரும்பப் பெறப்பட்டது. இன்று பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும் என்று தமிழக, புதுச்சேரி அரசுகள் அறிவித்துள்ளன.

நாளை சனிக்கிழமை ரமலான் பண்டிகையை ஒட்டி விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்