தமிழகம் கொந்தளிக்கையில் தில்லாலங்கடி மோகனாம்பாள் நாடகம் பார்த்த ரஜினி – கோலிவுட் வேதாளம்

0
280
Rajinikanth

வேதாளத்தைப் பார்த்து நாளாகிறது. காலையிலேயே கிளம்பினேன். வேதாளம் அறையில் இருந்தது. ரவை, கேரட், பீன்ஸ், பட்டாணி என சமையலுக்கான பொருள்கள். வேதாளம் சமைக்கப் போகிறது. அதுவும் கிச்சடி.

“என்னைய்யா, படம் வரலைன்னா இந்தப் பக்கம் வர மாட்டியா? நான் வேண்டாதவனாயிட்டனா?” என்றது வேதாளம், கேரட்டை நறுக்கியபடி.

வேதாளத்திடம் இப்படியொரு முகவுரையை எதிர்பார்த்திருந்தேன். பதில் சொன்னால் நீளும். யு டர்ன் அடித்து தமிழக பிரச்சனைக்கு வந்தேன். “தமிழ்நாடு முழுசும் போராட்டக்களமா இருக்கு. நீயும் தூத்துக்குடி பக்கம் போயிருப்பேன்னு நினைச்சேன்.”

“கட்சி தொடங்கி ஆட்சி செய்யப்போறேன்னு சொன்னவங்களே போராடுற மக்களை சந்திக்காம கூலா நாடகம் பார்க்கிறாங்க…”

“நீ யாரைச் சொல்ற? சரத்குமார், கமல் எல்லாம் தூத்துக்குடி போனாங்களே?”

“ஸ்ட்ரைட்டா முதலமைச்சர் ஆவேன் சிஸ்டத்தை சரி செய்வேன்னு சொன்னது யாரு?”

“ஓ… ரஜினியா?”

“அவர்தான். ஸ்டெர்லைட்டுக்கு ஒருவரி ட்வீட், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க ஒரு வரி ட்வீட். நம்ம கடமை முடிஞ்சதுன்னு நாடகம் பார்க்க போயிட்டார்.”

“வாழ்க்கையே ஒரு நாடகம்தானே…”

“அடச்சே, அதை நான் சொல்லலை. ரஜினியோட சொந்தக்காரர் இல்லையா ஒய்.ஜி.மகேந்திரன். அவரோட மகள் மதுவந்தி தில்லாலங்கடி மோகனம்பாள்னு ஒரு நாடகத்தை வாணி மகால்ல ஒருநாள் முன்னாடி நடத்துனாங்க. முதல்வரிசையில உட்கார்ந்து நாடகத்தை ரசிச்சுப் பார்த்தது யார்னு நினைக்கிற? ரஜினி.”

“அவங்க குல வழக்கமே அப்படித்தானே. ஸ்வாதியை ரயில்வே ஸ்டேஷன்ல வச்சு யாரோ கொலை செய்தப்போ, அது பார்ப்பன பொண்ணுங்கிறதாலே கொதிச்சுப்போய் ஒய்.ஜி.மகேந்திரன் அறிக்கை எல்லாம் விட்டாரு. பிலால் லால்னு ஒரு முஸ்லீம் மிருகம்தான் கொன்னான்னு போலீஸை முந்திக்கிட்டு புலன்விசாரணை நடத்தினாரு. அதெப்டி உனக்கு தெரியும்? மீடியால பொய் நியூஸ் போடறியான்னு பொடனியில ரெண்டு போட்டு உள்ள போட்டிருந்தா அடங்கியிருப்பானுங்க. அந்த கெத்துதான் நம்ம போலீஸ்கிட்ட இல்லையே. மக்களுக்காக போராட்டம் நடத்துறவங்க மேலதானே மேய்வானுங்க.”

“ஸ்வாதி கொலைக்கும். ஆண்டாள் விவகாரத்துலயும் பொங்கின ஒருத்தனாவது ஸ்டெர்லைட், காவிரி மேலாண்மை வாரியம் விவகாரத்தில் கருத்து சொன்னானா? தெருவுக்கு வந்து போராடினானா? இவனுங்க எவ்வளவு சுயநலமான பிராணிங்கங்கிறது தெரிஞ்ச பிறகும் சிலதுங்க காவடி தூக்குதே, அதுதான் சகிக்க முடியலை.”

“பேச்சு ரொம்ப டெரரா போகுது. படம் எதாவது பார்த்த?”

“பூமரம் படம்தான் பார்க்கணும்னு நினைச்சேன். 1983, ஆக்ஷன் ஹீரோ பிஜு படங்களை இயக்குனவர்தான் பூமரத்தையும் இயக்கியிருக்கார். படம் பக்கான்னு சொல்றாங்க.”

“ஆனா, நிறைய பேர் பாதியில எழுந்து வந்திட்டதா நியூஸ் வந்திருக்கே.”

“அப்படியா? எனக்கு தெரியலை. டிபன் முடிச்சிட்டு ரெடி பிளேயர் ஒன் போலாமா?” – காய்களை வாணலியில் வேக வைத்துக் கொண்டே வேதாளம் கேட்டது.

“அதென்ன?”

“உன்னை தூக்கி வெயில்ல போட. ஸ்டீபன் ஸ்பீல்பெர்க்கோட புதிய படம்.”

“ஓ… மறந்திட்டேன். எனக்கு அவரோட சயின்ஸ் பிக்ஷன் அவ்வளவா பிடிக்காது. அதுவும் வார் ஆஃ;ப் தி வேர்ட்ஸ் எனக்கு சுமாராதான் இருந்திச்சி.”

“இந்தப் படம் நல்லாயிருக்குன்னு சொல்றாங்க.”

“ஒண்ணு பண்ணுவமா… கமலோட காக்கி சட்டை போட்டிருக்கான் பார்க்கலாமா?”

வேதாளம் முறைத்தது. “நீ கிளம்பு. உனக்கு கிச்சடி கிடையாது.”

“ஓகே வேண்டாம். இங்கிலீஷ் படமும் வேண்டாம், நீயே டிசைட் பண்ணு.” பொறுப்பை அதனிடம் தள்ளிவிட்டேன்.

வேதாளம் ரவையை போட்டு கிளறியது. வேதாளத்துக்குள் ஒரு நளன் இருக்க வேண்டும். கிச்சடிக்கே வாசனை வந்தது.

திடீரென்று, “ரங்கஸ்தலம் போலாமா” என்றது வேதாளம்.

சமந்தா படம். “செம சாய்ஸ்” என்றேன் மறுக்காமல். சட்டென்று ஒரு சந்தேகம் எழ கேட்டேன். “ஊரே காவிரிக்கும், ஸ்டெர்லைட்டுக்கும் போராடிக்கிட்டிருக்கிறப்போ நாம சினிமாவுக்கு போறது சரியா?”

“தப்பேயில்ல. நீயும் நானும் கட்சி ஆரம்பிச்சு சிஎம்மாகி சிஸ்டத்தை ரிப்போர் பண்ணப் போறதா சொல்லலையே?”

“ஆமா சொல்லலை.”

“அப்போ தாராளமா போலாம்.”

இதையும் படியுங்கள்: #BharatBandh: வடமாநிலங்களில் பரவும் வன்முறை; 4 பேர் பலி; வாகனங்களுக்கு தீ வைப்பு

இதையும் படியுங்கள்: கௌதம் மேனன் பொய் சொல்கிறாரா…?

இதையும் படியுங்கள்: எழுகவே, தமிழ் பூமி

இதையும் படியுங்கள்: உலக தண்ணீர் தினம் : 84.4 கோடி மக்கள் தண்ணீர் இல்லாமல் அவதி

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்