தமிழகமே அதிர வெளியானது ‘தளபதி’ விஜய்யின் ஒரு குட்டி கதை முதல் சிங்கிள்

Master's first single Oru Kutti Katha which is sung by Vijay himself is released on Valentine's day, Today, and it has been said that this song will be the introduction song of Vijay in the movie.

0
1403

‘தளபதி’ விஜய் நடிக்கும் ‘மாஸ்டர்’ திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க, சாந்தனு, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா என்று ஒரு நடிகர் பட்டாளமே நடிக்கின்றனர். 

இந்நிலையில், அடுத்து என்ன வெளியாகும் என்றும் ஆவலுடன் காத்திருந்த ரசிகர்களுக்கு இன்று (பிப்ரவரி 14) காதலர் தினத்தன்று இப்படத்தின்  ‘ஒரு குட்டி கதை’ முதல் சிங்கிள் பாடலை வெளியிடுவதாக அறிவித்திருந்தனர்.

மேலும் ஒரு இன்ப அதிர்ச்சியாக இப்படத்தின் இசையமைப்பாளர் அனிருத், இப்பாடலை விஜயே பாடியுள்ளார் என தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு சூப்பரான புகைப்படத்துடன் அறிவிப்பை வெளியிட்டு விஜய் ரசிகர்களை அதகளப்படுத்தினார்.  

தற்போது ‘தளபதி’ விஜய் பாடிய மாஸ்டர் திரைப்படத்தின் முதல் சிங்கிள் ட்ராக் ‘ஒரு குட்டி கதை’ வெளியாகியுள்ளது.

மேலும் இப்பாடலின் வரிகளை பாடகர்,இயக்குனர், காமெடி நடிகர், பாடலாசிரியன் என பனமுக திறமைக் கொண்ட அருண்ராஜா காமராஜ் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இப்படம் வருகின்ற தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here