காவிரி விவகாரம் தொடர்பாக தமிழகத்தில் எழுந்த எதிர்ப்பை அடுத்து, சென்னையில் நடைபெறவிருந்த ஐபிஎல் போட்டிகள் மகாராஷ்டிரா மாநிலம் புனேவி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அங்கும் தண்ணீர் பிரச்சினையால் சிக்கல் எழுந்துள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழகத்தில் தன்னெழுச்சியாக போராட்டங்கள் நடந்து வருகிறது. இந்நிலையில், சென்னையில் ஐ.பி.எல் போட்டிகள் நடத்தக் கூடாது என பல்வேறு அரசியல் தலைவர்கள், அமைப்புகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்தனர். ஆனால் இந்த எதிர்ப்பையும் போட்டி நடத்தப்பட்டது. அப்போது போட்டி நடந்த சேப்பாக்கம் மைதானத்திற்கு வெளியே, நாம் தமிழர், எஸ்டிபிஐ, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, திரைத்துறையைச் சேர்ந்த பாரதிராஜா, அமீர், கவுதமன், வெற்றிமாறன் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டன்ர்.

இதனைத்தொடர்ந்து, தமிழகத்தில் போராட்டங்கள் தீவிரமடைந்து வருவதால் சென்னையில் நடைபெறவுள்ள போட்டிகளுக்கு உரிய பாதுகாப்புக் கொடுக்க முடியாது என பிசிசிஐ.யிடம் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, போட்டிகள் புனே மைதானத்தில் நடைபெறும் என்று ஐ.பி.எல் நிர்வாகம் அறிவித்தது.

இந்நிலையில், மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது. அதில், மக்களுக்கே தண்ணீர் பற்றாக்குறை நிலவும் சூழலில், புனேவில் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகளை நடத்தத் தடை விதிக்க வேண்டும் என கோரப்பட்டிருந்தது. மேலும் மைதானத்திற்கு நாளொன்றுக்கு 3.30 லட்சம் லிட்டர் தண்ணீர் செலவிடப்படுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை விசாரித்த மும்பை உயர்நீதிமன்றம், மக்களுக்கே தண்ணீர் பற்றாக்குறை நிலவும் சூழலில், மைதானத்திற்குத் தேவையான தண்ணீரை எப்படி ஏற்பாடு செய்வீர்கள் என மகாராஷ்டிர மாநில கிரிக்கெட் சங்கத்துக்குக் கேள்வி எழுப்பியுள்ளது.

இதையும் படியுங்கள்: உலக தண்ணீர் தினம் : 84.4 கோடி மக்கள் தண்ணீர் இல்லாமல் அவதி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here