கிருஷ்ணா நதிநீர் தொடர்பாக ஆந்திர முதல்வருடன் பேச்சுவார்த்தை நடத்த தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆந்திரா சென்றார்.

விஜயவாடா சென்ற தமிழக முதல்வரை ஆந்திர அமைச்சர் சந்திரபாபு நாயுடு வரவேற்றார். அவருடன் எடப்பாடி பழனிசாமி, தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர். இரு மாநில முதலமைச்சர்களின் பேச்சுவார்த்தையின் முடிவில் தமிழகத்துக்கு 2.5 டி.எம்.சி நீர் திறக்க ஆந்திர அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் ஆந்திர -தமிழக அரசு உயர் அதிகாரிகள் அடுத்த வாரம் திருப்பத்தியில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும், பரமரிப்புக்காக 443 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள் : தமிழகத்துக்கு கூடுதலாக தண்ணீர் திறந்துவிட்டது ஆந்திரா

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்