மத்திய அரசு  நாடு முழுவதும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் பல நடவடைக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் நாடு முழுவதும் எலக்ட்ரிக் பஸ்களை இயக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

முதற்கட்டமாகஇதைபோக்குவரத்துதுறையில்செயல்படுத்தஅனைத்துஏற்பாடுகளையும்செய்து வருகிறது.

இதற்காக ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் எவ்வளவு எலக்ட்ரிக் பஸ் வேண்டும் என்று எண்ணிக்கை பெறப்பட்டது. மேலும், அந்தந்த மாநிலங்களில் ‘எலக்ட்ரிக் பஸ்களின் ’சோதனை ஓட்டமும் நடத்தப்பட்டு வந்தது.இதன்படி மத்திய அரசிடமிருந்து இருந்து 14,988 பஸ்கள் வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

இதை பரிசீலித்த மத்திய அரசு 64 நகரங்களுக்கு 5595 எலக்ட்ரிக் பஸ்களை பயன்படுத்த அனுமதித்துள்ளது. இதில் தமிழகத்துக்கு 525 எலக்ட்ரிக் பஸ்களும், மகாராஷ்டிரா மாநிலத்துக்கு 725 பஸ்கள், உத்தரபிரதேச மாநிலத்துக்கு 600 பஸ்களும் ஒதுக்கப்பட்டுள்ளது. டெல்லியில் மெட்ரோ ரெயில் நிலையங்களை இணைக்கும் வகையில் 100 பஸ்கள் கொடுக்கப்படுகிறது.

இது தவிர பெருநகரங்களில் பஸ்களை இயக்கும் வகையில் 400 பஸ்கள் பயன் படுத்த முடிவு செய்துள்ளனர். தமிழகத்தில் மதுரை, திருச்சி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், வேலூர், தஞ்சாவூர் ஆகிய 8 நகரங்களில் எலக்ட்ரிக் பஸ்கள் இயக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

இதில் மதுரை, திருச்சி, கோவை ஆகிய நகரங்களுக்கு தலா 100 பஸ்களும், ஈரோடு, திருப்பூர், சேலம், வேலூர் ஆகிய நகரங்களுக்கு 50 பஸ்களும், தஞ்சாவூருக்கு 25 பஸ்களும் ஒதுக்கப்பட்டு உள்ளது. சென்னைக்கு மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் திருவான்மியூர்- சென்ட்ரல், கோயம்பேடு- பிராட்வே இடையே தனியாக எலக்ட்ரிக் பஸ்கள் விடப்படுகிறது.

கடந்த 2 ஆண்டுளாக சுற்றுச் சூழலை பாதிக்காதவகையில் பேட்டரியில் எலக்ட்ரிக் பஸ்களை சென்னையில் சோதனை ஓட்டம் பரீட்சார்த்த முறையில் நடத்தப்பட்டு வந்தது. தமிழக போக்குவரத்துதுறையில் இதுவரை டீசல் பஸ்கள்தான் இயக்கப்பட்டு வருகிறது.

பேட்டரியில் இயங்கும் எலக்ட்ரிக் பஸ்சின் வழித்தடத்தை கண்காணிக்கும் ஜி.பி.எஸ். வசதி, தானியங்கிகியர், தானியங்கிகதவு, தீயணைப்புகருவி, முதலுதவிபெட்டி, கண்காணிப்பு கேமரா போன்றவை இருக்கும். மாற்றுத் திறனாளிகள் 3 சக்கர சைக்கிளுடன் பஸ்சில் ஏறுவதற்கும் இதில் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

பஸ் இயங்க 26 பேட்டரிகள் பொருத்தப்பட்டு இருக்கும். இந்த பேட்டரிகளை 3 மணி நேரம் சார்ஜ் செய்தால் 150 கி.மீ. வரை இயக்கலாம்.

இது குறித்து அசோக்லேலண்ட் நிறுவன உயர் அதிகாரி கூறியதாவது:-சாதாரண பஸ்களின் வடிவமைப்பில் இருந்து எலக்ட்ரிக் பஸ்களின் வடிவமைப்பு சற்று வித்தியாசமாக அமைக்கப்படுகிறது. இருக்கை வசதி சொகுசாக அமைக்கப்படுகிறது. எலக்ட்ரிக் பஸ்சில் புகை, ஒலி மாசு இருக்காது. பஸ் இயங்கும் தூரத்துக்கு சாதாரண பஸ்களை இயக்கினால் 40 லிட்டர் டீசல் செலவாகும். பேட்டரி ரீசார்ஜ் செய்ய அதில் பாதி செலவுதான் ஏற்படும். பஸ்களின் கூரை மீது சூரிய ஒளி தகடுகளை நிறுவி பேட்டரியை ரீசார்ஜ் செய்யவும் இதில் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் என்றுஅவர் கூறினார்.