தமிழகத்தில் 8 மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக்கூடுமென சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனத்தால் அடுத்த 24 மணி நேரத்திற்குள் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருவள்ளூர், திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் இடியுடன் பலத்த மழையும் அண்டை மாநிலமான புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடுமென சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.

 மேலும், தமிழகத்தில் கோவை, ஈரோடு, திருப்பூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திண்டுக்கல், திருச்சி, கரூர், மதுரை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், புவியரசன் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக் கூடும் என தெரிவித்துள்ளார்.

அரபிக்கடலில் தென்மேற்கு, லட்சத்தீவு, குமரி கடல், மன்னார் வளைகுடா ஆகிய பகுதிகளில் மணிக்கு 55 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடுமென்று தெரிவித்துள்ளார்.இதனிடையே, குளச்சல்-தனுஷ்கோடி இடையே நாளை நள்ளிரவு வரை 4 மீட்டர் உயரத்திற்கு ராட்சத அலைகள் எழும்பக்கூடும். எனவே, மீனவர்கள் அடுத்த 3 நாட்களுக்கு அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும், வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கேட்டுக்கொண்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here