வங்கக்கடலின் தென் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; மதுரை, தேனி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், கன்னியாகுமரியில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் இதர மாவட்டங்களில் வறண்ட காலநிலை நிலவும்.

நவ. 21, 22-ம் தேதிகளில் ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, புதுக்கோட்டையில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. 23-ம் தேதி நாகை, தஞ்சை, திருவாரூர், சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டையில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. 24-ல் கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கையில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. இன்று முதல் 24-ம் தேதி வரை அரபிக் கடலின் தென் மேற்கு பகுதி, மத்திய பகுதியில் பலத்த சூறைக்காற்று வீசக்கூடும்.

23-ம் தேதி முதல் வங்கக்கடலின் மத்திய பகுதி, தென்மேற்கு தமிழக கரையோரத்தில் பலத்த சூறைக்காற்று வீசக்கூடும். மணிக்கு 40 முதல் 60 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசும் என்பதால் மீனவர்களுக்கு 4 நாட்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. சென்னை, புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here