தமிழகத்தில் 5000-க்கும் கீழ் பதிவாகும் கொரோனா பாதிப்பு: இன்றைய அப்டேட்

Tamil Nadu reports 57 deaths and 4,295 new COVID19 cases today.

0
92

தமிழகத்தில் புதிதாக 4,295 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இன்று(சனிக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை அடுத்து, தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 6,83,486 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் அதிகபட்சமாக இன்று 1,132 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் 3,163 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்றைய அறிவிப்பில் மேலும் 57 பேர் (அரசு மருத்துவமனை -30, தனியார் மருத்துவமனை -27) கொரோனாவுக்கு பலியாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 10,586 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 5,005 பேர் ஒரேநாளில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 6,32,708 பேர் குணமடைந்துள்ளனர். 40,192 பேர் இன்னும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் இன்று 90,242 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. இதுவரை மொத்தம் 88,56,280 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here