தமிழ்நாடு சுகாதாரத் துறை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள 200க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளில் நடத்திய ஆய்வின் முடிவில் 90 சதவீதத்துக்கும் மேற்பட்ட மருத்துவமனைகளில் தீத்தடுப்பு முறை சரியாக பின்பற்றப்படவில்லை என்று ஆய்வறிக்கையில் கூறியிருக்கிறது.

இது தொடர்பாக சமூக ஆர்வலர் தொடர்ந்த வழக்கில், தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் மேற்கண்ட ஆய்வுகளை நடத்துமாறு உத்தரவிட்டது.
இதன் அடிப்படையில், இந்த ஆய்வுக்கு அரசு மற்றும் அரசு உதவி பெறும் மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள் என தமிழகம் முழுவதும் உள்ள 100 மருத்துவமனைகளும், சென்னையில் உள்ள 100 மருத்துவமனைகளும் உட்படுத்தப்பட்டன.

இந்த ஆய்வில், பெரும்பாலான மருத்துவமனைகளில் தீத்தடுப்பு உபகாரணங்கள் பொருத்தப்பட்டு அதற்கான உரிமம் பெறப்படவில்லை என்பது தெரிய வந்துள்ளது.
ஒரு மருத்துவமனை கட்டுவதற்கான அனுமதி பெறுவதற்கு இந்த தீத்தடுப்பு உரிமம் அவசியம், ஆனால் தீத்தடுப்பு உரிமம் பெறாத மருத்துவமனைகள் அதனை பூர்த்தி செய்ய 10 நாட்கள் முதல் ஒரு ஆண்டு காலம் வரை அரசிடம் கால அவகாசம் கோரியுள்ளன.

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், சென்னையில் உள்ள பல முன்னணி மருத்துவமனைகளில் இருக்கும் தீத்தடுப்பு உபகரணங்கள் பழுதாகி, செயல்பட முடியாத நிலையில் இருப்பதுதான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here