தமிழகம் மற்றும் புதுச்சேரியில் டிடிவி தினகரன் மற்றும் அவரது உறவினர்களுக்குச் சொந்தமான இடங்களில் இரண்டாவது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

நமது எம்ஜிஆர் மற்றும் ஜெயா டிவி அலுவலகம், போயஸ் கார்டனில் உள்ள ஜெயா டிவியின் பழைய அலுவலகம், ஜாஸ் சினிமாஸ், தஞ்சையில் உள்ள நடராஜன் இல்லம், கோடநாடு எஸ்டேட், என சசிகலா குடும்பத்தினர் மற்றும் அவரது உறவினர்களுக்குச் சொந்தமான 150க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர், வியாழக்கிழமை (நேற்று) அதிரடி சோதனை நடத்தினர் வருகின்றனர்.

இந்நிலையில் இந்த சோதனை இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை (இன்றும்) தொடர்கிறது. தமிழகத்தில் சென்னை, திருச்சி, விழுப்புரம், தஞ்சை உள்ளிட்ட பகுதிகளில் இந்தச் சோதனை தொடர்ந்து வருகிறது. மேலும் புதுச்சேரியில் டிடிவி தினகரனின் பண்ணை வீடு உள்ளிட்ட இடங்களிலும் சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதையும் படியுங்கள்: துல்லியம், நியாயம், ஆதாரம்: ஊடகவியலின் அடிப்படைகள்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்