* பெண்களுக்கு சொத்தில் உரிமையுள்ளது என்றாலும் இந்தியாவில் 12.9 சதவிகித பெண்கள் மட்டுமே நில உடைமையாளர்களாகவுள்ளதாக அறிக்கையொன்று கூறுகிறது. இதன் சதவிகிதம் தென்மாநிலங்களைப் பொறுத்தவரையில் கூடுதலாக 1.5ஆக உள்ளது. அதேபோன்று வடகிழக்கு மாநிலங்களில் 9.8 சதவிகித பெண்கள் நில உடைமையாளர்களாகவுள்ளனர்.

* இந்தியாவைப் பொறுத்தவரையில் லட்சத்தீவுகள் மற்றும் மேகாலயாவில் மட்டுமே பெண்கள் நில உடைமையாளர்களின் எண்ணிக்கை அதிகம். அதேபோன்று பஞ்சாப் மற்றும் மேற்கு வங்கத்தில் குறைவான பெண்களே நில உடைமையாளர்களாகவுள்ளனர்.

* லட்சத்தீவு (41.0%), மேகலாயா (34.3%), அந்தமான் நிகோபார் (29.7%), ஆந்திரா (23.7%), கோவா (20.3%), தமிழ்நாடு (17.8%), கர்நாடகா (17.3%), கேரளா (17.2%), தாதர் ஹவேலி (16.5%), மகாராஷ்டிரா (14.1%) பெண்கள் நில உடைமையாளர்களாகவுள்ளனர்.

* இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமாகவுள்ள உத்தரப் பிரதேசத்தில் 6.1 சதவிகித பெண்கள் மட்டுமே நில உடைமையாளர்களாகவுள்ளனர். அதேபோன்று, மத்தியப் பிரதேசம் 8.6 சதவிகிதமாகவும், ராஜஸ்தான் 7.1 சதவிகிதமாகவுள்ளது.

* இந்தியாவில் சராசரியாக 12.9 சதவிகித பெண்கள் மட்டுமே நில உடைமையாளர்களாக இருக்கும்நிலையில், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் சமூகத்தில் 19.7 சதவிகித பெண்கள் நில உடைமையாளர்களாக இருக்கின்றனர்.

நன்றி: Indiaspend.com

இதையும் படியுங்கள்: குஜராத் படுகொலை பிரதான நாயகனின் முகமூடியைக் கிழிக்க நெருப்பாற்றில் நீந்தும் ஒரு ஐ.பி.எஸ் அதிகாரியின் போராட்டம்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here