1,300 டாஸ்மாக் கடைகளை மூடக்கூறிய சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவு செல்லும் – உச்சநீதிமன்றம்

0
186

தமிழகத்தில் 1300 டாஸ்மாக் கடைகளை மூட சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதற்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

தமிழகத்தில் நகர எல்லையில் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளை உள்ளாட்சி சாலைகளாக மாற்றாமல் அவற்றுக்கு அருகே டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு செயல்படுவதாக வழக்கறிஞர் கே.பாலு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளின் ஓரங்களில் செயல்படும் டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட உத்தரவிட்டது. இதனால் தமிழகம் முழுவதும் சுமார் 1300 டாஸ்மாக் கடைகளை தமிழக அரசு மூடியது. உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது.

இந்த வழக்கை இன்று (திங்கள்கிழமை) விசாரித்த உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது. மேலும், நெடுஞ்சாலையில் இருந்து டாஸ்மாக் கடைகள் அமைந்துள்ள தூரத்தை தனித்தனியாக கணக்கிட்டு, அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், விசாரணையை மே 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

இதையும் படியுங்கள்: சுரங்க முறைகேடு வழக்கில் ஜனார்த்தன ரெட்டிக்கு சாதகமாக தீர்ப்பு வர நீதிபதிக்கு 100 கோடி லஞ்சம் ; காங்கிரஸ் வெளியிட்ட வீடியோ

இதையும் படியுங்கள்: மக்களின் வரிப்பணம் 198 கோடி ரூபாய் வீண்; 580 கேள்விகளில் 17 கேள்விகளுக்கு மட்டுமே பதில்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்