தமிழகத்தில் 12,915 அரசு ஊழியர்களின் தபால் வாக்குகள் நிராகரிப்பு

0
110
Chennai High Court

மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் 12,915 பேரின் தபால் வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், காவல்துறையினருக்கு 4,35,003 பேருக்கு தபால் ஓட்டுக்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன என்றும் அவற்றில் சரியான விவரங்களை அளிக்காததால் 12,915 பேரின் தபால் வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளது என்றும் தேர்தல் ஆணையம் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. 

இதையடுத்து எதிர்காலத்தில் தபால் வாக்குகள் தொடர்பாக குழப்பம் ஏற்படுவதை தடுக்க வேண்டும் என அறிவுறுத்திய நீதிமன்றம் தபால் ஓட்டுக்கள் தொடர்பான அனைத்து விவரங்களையும் 2 நாட்களில் இணையதளங்களில் பதிவேற்ற வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here