தமிழகத்தில் கொரோனா பரவலை அதிகரித்து வருவதை முன்னிட்டு கோயில் திருவிழா, பேருந்துகளில் நின்று பயணிக்க தமிழக அரசு தடை விதித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்;

* கொரோனா பரவலை தடுக்க தமிழகத்தில் வரும் 10ம் தேதி முதல் திருவிழா, மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடை: தமிழக அரசு அறிவிப்பு

* கோயம்பேடு வணிக வளாகத்தில் சில்லறை வியாபார கடைகள் வரும் 10ம் தேதி முதல் செயல்பட தடை..!

* பேருந்துகளில் பயணிகள் நின்றவாறு பயணிக்க அனுமதி இல்லை: தமிழக அரசு அறிவிப்பு

* தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் 50% இருக்கைகளை மட்டுமே பயன்படுத்த அனுமதி: தமிழக அரசு அறிவிப்பு

* திருமண விழாக்களில் 100 பேருக்கு மிகாமல் மட்டுமே பங்கேற்க வேண்டும்: தமிழக அரசு அறிவிப்பு

* தேனீர் கடை மற்றும் உணவகங்களில் 50% பேர் மட்டுமே அனுமதிக்க வேண்டும்: தமிழக அரசு அறிவிப்பு

* தமிழகத்தில் அனைத்து வழிபாட்டுத் தளங்களிலும் இரவு 8 மணி வரை மட்டுமே பொதுமக்களுக்கு அனுமதி…!

* வணிக வளாகங்கள் 50% விழுக்காடு வாடிக்கையாளர்களுடன் இரவு 11 மணி வரை செயல்பட அனுமதி

* மாவட்டங்களுக்கு இடையேயான அரசு மற்றும் தனியார் பேருந்தும் மற்றும் சென்னையில் இயக்கப்படும் மாநகரப் பேருந்துகளில் உள்ள இருக்கைகளில் மட்டும் பயணிக்கலாம் அமர்ந்து பயணிக்க அனுமதி. பேருந்துகளில் நின்று பயணம் செய்ய அனுமதி இல்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here