தமிழகத்தில் 10ம் வகுப்பு தேர்வு கட்டாயம் நடக்கும் : பள்ளி கல்வித்துறை அமைச்சர் திட்டவட்டம்

0
296

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், தமிழகத்தில் நடைபெற இருந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பேட்டி: தமிழகத்தில் கட்டாயம் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படும். ஊரடங்கிற்கு பிறகு, 10 ஆம் வகுப்பு தேர்வுகள் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். தேர்வு அட்டவணை மே 3 ஆம் தேதிக்கு பிறகு முடிவு செய்யப்படும். ஒவ்வொரு தேர்வுக்கு மத்தியிலும் ஒரு நாள் விடுமுறை அளிக்கப்படும்.

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தும் போது, சமூக இடைவெளி உள்ளிட்ட ஊரடங்கு விதிமுறைகள் கடைபிடிக்கப்படும் என்றும் அவர் கூறினார். கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக மார்ச் 24 ஆம் தேதி தேர்வு எழுத முடியாத சுமார் 3 ஆயிரத்து400 க்கும் மேற்பட்ட மாணவ – மாணவிகள், மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு அளிக்கப்படும். என அமைச்சர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here