தமிழகத்தில் காற்றின் மாசுபாடு மோசமான நிலையில் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

நகரங்களில் பெருகி வரும் வாகனங்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்டவைகளால் சுவாசிக்கும் காற்றின் தரம் குறைந்துகொண்டே செல்கிறது. இதனால் சுத்தமான காற்றைச் சுவாசிப்பதே அரிதாகி வருகிறது. காற்றின் மாசுபாட்டால் வரும் நோய்கள் அடுத்த தலைமுறையையும் பாதிக்கும் வகையில் உள்ளது.

இந்தியாவில் உள்ள நகரங்களில், உலக சுகாதார அமைப்பு நிர்ணயித்துள்ள அளவைவிட காற்றில் அதிகளவு மாசு இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் நான்கு நகரங்களிலும், ஆந்திராவில் 15 நகரங்களிலும், தெலங்கானாவில் 10 நகரங்களிலும், கர்நாடகாவில் 10 நகரங்களிலும் காற்றின் மாசுபாசு அதிகரித்துள்ளதாக கிரீன்பீஸ் இந்தியா கூறுகிறது.

இதையும் படியுங்கள்: டிசிடபிள்யூவின் வேதிக் கழிவுகளால் அழியும் மக்கள்

காற்றில் 10 மைக்ரான் அளவிற்கு காணப்படும் நுண் துகள்கள் பிஎம்.10 (Particulate matter – PM10 ) என அழைக்கப்படுகின்றன. பிஎம்-10 அளவு உடலுக்கு பாதிப்பு ஏற்படுத்தக் கூடியவை. அதிலும் பிஎம்-2.5 அளவு என்பது உடலுக்கு மிகப்பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுத்தக் கூடியவை. ஒவ்வாமை, நுரையீரல் தொடர்பான நோய்கள், ஆஸ்துமா, கேன்சர் என காற்று மாசுபாட்டால் ஏற்படக் கூடிய நோய்கள் அதிகம்.

தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் நச்சுப்புகையால் அதனைச் சுற்றி வசிக்கும் மக்கள் பெருமளவில் பாதிப்புக்குள்ளாகின்றனர். தமிழகத்தில் காற்று மாசுபாடு அதிகமுள்ள நகராக தூத்துக்குடி உள்ளது. அதனைத் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் திருச்சியும், மூன்றாவது இடத்தில் மதுரையும், நான்காவது இடத்தில் சென்னையும் உள்ளது. தூத்துக்குடியில் பிஎம்-10 அளவு 182ஆகவும், திருச்சியில் 85ஆகவும், மதுரையில் 82ஆகவும், சென்னையில் 71ஆகவும் உள்ளது.

சமீபத்தில், தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும், ஆலை விரிவாக்கப் பணிகளுக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கக் கூடாது எனவும் குமரெட்டியார்புரம் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். ஸ்டெர்லைட் ஆலை வெளியிடும் நச்சுப் புகையால் பல்வேறு நோய்களால் மக்கள் பாதிக்கப்படுவதாகவும் அவர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும் ஸ்பிக் ஆலை, டிசிடபுள்யு தொழிற்சாலை, அனல் மின் நிலையங்களால் தூத்துக்குடி நகர மக்கள் கடும் துயரங்களை அனுபவித்து வருகின்றனர்.

Source : IndiaSpend.com

இதையும் படியுங்கள்: ஒக்கி பேரிடர்: கரம் கோர்ப்போம்; கட்டியணைப்போம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here