தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 618 பேருக்கு கொரோனா உறுதி செய்யபட்டுள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் மொத்தம் கொரோனா பாதிப்பு 34,47,006 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவுக்கு 04 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இதுவரை பலியானோர் எண்ணிக்கை 37,993 ஆக உள்ளது. இன்று ஒரேநாளில் 2,153 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். கொரோனா பாதித்த 34,47,006 பேரில் இதுவரை 33,98,231 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுபோன்று இன்று மட்டும் 63,267 மாதிரிகள் பரிசோதனை செய்யபட்டுள்ளது.
மொத்தமாக தமிழகத்தில் 6,40,86,016 பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் சென்னை – 156, கோயம்புத்தூர் – 87, செங்கல்பட்டு – 72, திருப்பூர் – 17, சேலம் – 21, ஈரோடு – 27 பேர் என ஆகிய மாவட்டங்களில் அதிகபட்சமாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தமிழகத்தை பொறுத்தளவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், இன்று சற்று குறைந்தே காணப்படுகிறது. மேலும், கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 10,782 ஆக குறைந்துள்ளது.