தமிழகத்தில் மேலும் 5,127 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 24,65,874 ஆக உயர்ந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் தினமும் கொரோனா பாதிப்பு, உயிரிழப்பு, குணமடைந்தோர் விவரங்கள் குறித்து தினமும், தமிழ்நாடு சுகாதாரத்துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி, சுகாதாரத்துறை (ஜூன்-27)  இன்று வெளியிட்ட அறிக்கையில்,

* தமிழ்நாட்டில் மேலும் 5,127 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 24,65,874 ஆக அதிகரித்துள்ளது.

* தமிழ்நாட்டில் கொரோனாவில் இருந்து மேலும் 7,159 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் மொத்தம் 23,90,783 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

* தமிழ்நாட்டில் கொரோனாவால் இன்று மேலும் 91 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 32,290 ஆக உயர்ந்துள்ளது. தனியார் மருத்துவமனையில் 27 பேரும், அரசு மருத்துவமனையில் 64 பேரும் உயிரிழந்துள்ளனர்.

* சென்னையில் இன்று ஒரே நாளில் 308 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 5,31,732 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

* தமிழ்நாட்டில் இதுவரை 3,23,54,310 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 1,63,817 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

* தமிழ்நாட்டில் 42,801 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

* தமிழ்நாட்டில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 14,41,703 பேர் ஆண்கள், இன்றைக்கு மட்டும் 2,904 ஆண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

* தமிழ்நாட்டில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 10,24,133 பேர் பெண்கள், இன்றைக்கு மட்டும் 2,223 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

* தமிழ்நாட்டில் இதுவரை மொத்தம் 38 திருநங்கைக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்றைக்கு திருநங்கை யாரும் பாதிக்கப்படவில்லை.

* இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழ்நாட்டில்  மொத்தம் 273 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அரசு மையங்கள் 69; தனியார் மையங்கள் 204.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here