தமிழகத்தில் மேலும் 4,276 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 9 லட்சத்து 15 ஆயிரத்து 386 (9,15,386) ஆக உயர்ந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தினமும் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், தினமும், தமிழக சுகாதாரத்துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி, சுகாதாரத்துறை (ஏப்-08) இன்று வெளியிட்ட அறிக்கையில், 
* தமிழகத்தில் மேலும் 4,260 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 9,15,386 ஆக அதிகரித்துள்ளது.

* தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மேலும் 1,869 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் மொத்தம் 8,72,415 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

* தமிழகத்தில் கொரோனாவால் (ஏப்-08)  இன்று மேலும் 19 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 12,840 ஆக உயர்ந்துள்ளது. அரசு மருத்துவமனையில் 11 ; தனியார் மருத்துவமனையில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

* சென்னையில் இன்று ஒரே நாளில் 1520 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 2,59,320 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

* தமிழகத்தில் இதுவரை 2,02,58,907 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 85,281 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

* தமிழகத்தில் தற்போது 30,131 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

* தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 5,52,545 பேர் ஆண்கள், இன்றைக்கு மட்டும் 2,593 ஆண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

* தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 3,62,805 பேர் பெண்கள், இன்றைக்கு மட்டும் 1,683 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

* தமிழகத்தில் இதுவரை மொத்தம் 36 திருநங்கைக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்றைக்கு திருநங்கை யாருக்கும் கொரோனா உறுதி செய்யப்படவில்லை.

* இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 260 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அரசு மையங்கள் 69; தனியார் மையங்கள் 191.

* வெளிமாநிலங்களில் இருந்து இன்று தமிழகம் வந்த 16 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

* கர்நாடகா- 1
*மேற்குவங்கம்-9
*பீகார்-2
*ஜார்கண்ட் -1
*மகாராஷ்டிரா -1
* ஆந்திரப்பிரதேசம்  -1
*மத்தியபிரதேசம் – 1

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here