தமிழகத்தில் மேலும் 3,672 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 9 லட்சத்து 03 ஆயிரத்து 479 (9,03,479) ஆக உயர்ந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தினமும் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், தினமும், தமிழக சுகாதாரத்துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி, சுகாதாரத்துறை (ஏப்-05) இன்று வெளியிட்ட அறிக்கையில்,  

* தமிழகத்தில் மேலும் 3,672 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 9,03,479 ஆக அதிகரித்துள்ளது.

* தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மேலும் 1,842 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் மொத்தம் 8,66,913 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

* தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 11 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 12,789 ஆக உயர்ந்துள்ளது.
* அரசு மருத்துவமனையில் 6 ; தனியார் மருத்துவமனையில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

* சென்னையில் (ஏப்-05)  இன்று ஒரே நாளில் 1335 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 255074 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

* தமிழகத்தில் இதுவரை 2,00,12,235 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 80,056 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

* தமிழகத்தில் தற்போது 23,777 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

* தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 5,45,385 பேர் ஆண்கள், இன்றைக்கு மட்டும் 2,196 ஆண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

* தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 3,58,058 பேர் பெண்கள், இன்றைக்கு மட்டும் 1,476 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

* தமிழகத்தில் இதுவரை மொத்தம் 36 திருநங்கைக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்றைக்கு திருநங்கை யாருக்கும் கொரோனா உறுதி செய்யப்படவில்லை.

* இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 260 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அரசு மையங்கள் 69; தனியார் மையங்கள் 191$.

* வெளிமாநிலங்களில் இருந்து இன்று தமிழகம் வந்த 6 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
* கர்நாடகா- 4
* ஆந்திரப்பிரதேசம் -2

* வெளிநாடுகளில் இருந்து இன்று தமிழகம் வந்த 3 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
*இங்கிலாந்து-1
* ஓமன் -2 .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here