மிழகத்தில்  (ஜூலை-7) இன்று 3,616 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மொத்த எண்ணிக்கை 1,18,594-ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் ஜூலை மாதம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும், கொரோனா தொற்று அறிகுறியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு அடுத்தடுத்து நோய்த்தொற்று உறுதி செய்யப்படுவதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

* தமிழகத்தில் கொரோனா தொற்றினால் 45,839 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 71,116 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 4,545 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். கொரோனாவால் இன்று மட்டும் 65 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு == ஆக உயர்ந்துள்ளது. இன்று அரசு மருத்துவமனைகளில் 45 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 20 பேரும் கொரோனா தொற்றினால் உயிரிழந்தனர்.

* சென்னையில்  (ஜூலை-7) இன்று ஒரே நாளில் 1,203 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சென்னையில் இதுவரை 71,230 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 47,735 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 22,374 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் கொரோனாவினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,120-ஆக உள்ளது.

* தமிழகத்தில் மொத்தம் 96 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. 50 அரசு மருத்துவமனைகளில், 46 தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.

* தமிழகத்தில் இதுவரை 1,18,594 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

* பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வந்த 65 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

* தமிழகத்தில் இதுவரை ஆண்கள் 72,550 பேரும், பெண்கள் 46,022 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 22 பேரும் கொரோனா பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர்.

* தமிழகத்தில் 12 வயதிற்குள் 5,877 பேரும், 13 வயதிலிருந்து 60 வயதிற்குள் 98,350 பேரும், 60 வயதிற்கு மேல் 14,367 பேரும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

* தமிழகத்தில் இன்று கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 65-ஆக உள்ளது. இதில் 13 பேர் எந்த ஒரு நோய் தொற்று அறிகுறியும் இல்லாமல் உயிரிழந்துள்ளானார்.

* வெளிமாநிலங்களில் அல்லது வெளிநாடுகளில் இருந்து வந்து கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள்;

     ^ மகாராஷ்டிரா – 10

     ^ டெல்லி – 03

     ^ கேரளா – 09

     ^ கர்நாடகா – 25

     ^ தெலுங்கானா – 01

     ^ ஆந்திரப்பிரதேசம் – 04

     ^ ராஜஸ்தான் – 01

     ^ புதுச்சேரி – 01

     ^ ஒடிசா – 01

* வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள்

     ^ பஹ்ரைன் – 01

     ^ குவைத் – 04

     ^ சவூதி அரேபியா – 03

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here