தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 30,580 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தமிழகத்தில் (22/01/22) நேற்று 30,744 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், இன்று சற்று குறைந்துள்ளது.
கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்த தரவுகளை மாநில சுகாதாரத் துறை அறிக்கை வாயிலான ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ளது.
அதில், தமிழகத்தில் இன்று (ஜன.23) ஒரு நாளில் மட்டும் 1,57,732 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதிதாக 30,580 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 31,33,990-ஆக அதிகரித்துள்ளது.
புதிதாக 40 பேர் உயிரிழந்தனர். இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இதுவரை மொத்தமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37,218-ஆக உயர்ந்துள்ளது.