தமிழகத்தில் மேலும் நான்கு மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி

0
72

தமிழகத்தில் மேலும் 4 மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. 

கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், சிவகங்கை ஆகிய மேலும் நான்கு மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கி இருக்கிறது. ஜனவரி 14 முதல் 31 ஆம் தேதி வரை ஜல்லிக்கட்டு, வடமாடு மஞ்சுவிரட்டு, எருதுவிடும் விழாக்களை நடத்தவும் அனுமதி வழங்கியுள்ளது. 

2021-ஆம் ஆண்டு தமிழகத்தில் ஜல்லிக்கட்டுநடத்துவதற்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கப்படுவதாக கடந்த டிசம்பர் மாதம் 23 ஆம் தேதி தமிழக அரசு அறிவித்தது.  திறந்த வெளியில்,  ஜலிலிக்கட்டுப் போட்டிகளை நடத்துவது, மாடுபிடி வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு, அதன்பின்னரே அனுமதிப்பது என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டை நடத்தவிதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

மதுரை மாவட்டத்தின் 3 இடங்களில் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு நடத்த ஏற்கெனவே அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், சிவகங்கையில் 1 இடத்திலும் வேலூரில் 25 இடங்களிலும், கிருஷ்ணகிரியில் 3 இடங்களிலும், திருப்பத்தூரில் 13 இடங்களிலும் ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here