தமிழகத்தில் தலைதூக்கி இருக்கும் இந்த போதைக் கலாச்சாரத்தைக் கட்டுக்குள் கொண்டுவர தமிழக முதல்வர் உடனடிச் செயல்பாட்டில் இறங்க வேண்டும் என கமலஹாசன் கோரிக்கை.

தமிழகத்தில் இன்று சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை பலரும் போதை பழக்கத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனால், அவர்களது குடும்பங்கள் சீரழிவதுடன், போதை தலைக்கேறிய பின் வாகனம் ஓட்டுவதால், பல சாலை விபத்துக்களும் நிகழ்கிறது. இதனால், நாளுக்கு நாள் உயிரிழப்புகள் ஏற்பாட்டுக்கு கொண்டு தான் இருக்கிறது.

இந்நிலையில், இதுகுறித்து, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் அவர்கள் இதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில், ‘சமீபத்திய சாலை விபத்துக்களில் இளைஞர்கள் பலியான கோரச் சம்பவங்கள் பதறவைக்கின்றன. போதையே காரணம் என்கிறார்கள். தமிழகத்தில் தலைதூக்கி இருக்கும் இந்த போதைக் கலாச்சாரத்தைக் கட்டுக்குள் கொண்டுவர தமிழக முதல்வர் உடனடிச் செயல்பாட்டில் இறங்க வேண்டும்.’ என பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here