தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 15, 16 மற்றும் 17ஆம் தேதிகளில் தமிழக அரசு ஏற்கனவே விடுமுறை அறிவித்துள்ளது.

இந்நிலையில், பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில் ஜனவரி 14ஆம் தேதி அரசு விடுமுறை அறிவித்து தமிழக அரசு இன்று அரசாணை வெளியிட்டுள்ளது.

அனைவரும் குடும்பத்துடன் சொந்த ஊருக்கு சென்று பொங்கல் பண்டிகை கொண்டாடுவதற்கு ஏதுவாக 14ஆம் தேதி (திங்கள்கிழமை) அன்றும், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களில் உள்ள அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 14ஆம் தேதி விடப்பட்ட விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், வரும் பிப்ரவரி மாதம் 9ஆம் தேதி பணி நாளாக இருக்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழக அரசு தற்போது 14 ஆம் தேதியும் அரசு விடுமுறை அறிவித்துள்ளதால் வருகிற 12ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை தொடர்ச்சியாக 6 நாட்கள் அரசு ஊழியர்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை. 18ஆம் தேதி வெள்ளிக்கிழமை ஒரு நாள் விடுமுறை எடுத்தால், அடுத்ததாக சனி, ஞாயிறு ஆகிய நாட்கல்ளிலும் விடுமுறை கிடைக்கும் என்பதால் அரசு ஊழியர்களுக்கு தொடர்ச்சியாக 9 நாட்கள் வரை விடுமுறை கிடைக்கும் சூழ்நிலை தற்போது உருவாகியுள்ளது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்