பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியூர் செல்வோருக்கு வசதியாக அரசுப் போக்குவரத்துக் கழகம் சென்னையில் 30 முன்பதிவு மையங்கள் இன்று(வியாழக்கிழமை) திறக்கப்படுகின்றன.

கோயம்பேட்டில் 26 கவுண்ட்டர்களும், தாம்பரம் சானிடோரியத்தில் இரண்டு கவுண்ட்டர்களும், பூந்தமல்லி, மாதவரம் ஆகிய இடங்களில் தலா ஒன்று என 30 சிறப்பு முன்பதிவு மையங்கள் இன்று முதல் செயல்படும். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சிறப்பு பேருந்துகளில் முன்பதிவு இன்று தொடங்கியது.

மேலும் முன்பதிவு செய்து கொள்ள நடைமுறையில் உள்ள இணையதளமான www.tnstc.in உடன் www.redbus.in, www.paytm.com மற்றும் www.busindia.com போன்ற இணையதளங்கள் மூலமாகவும் முன்பதிவு செய்துகொள்ள வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது

பொங்கலை முன்னிட்டு, 11-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை தினமும் இயங்ககூடிய 2275 பஸ்களுடன் கூடுதலாக 5163 சிறப்பு பஸ்களையும் சேர்த்து 4 நாளில் மொத்தம் 14 ஆயிரத்து 263 பஸ்கள் சென்னையில் இருந்து இயக்கப்பட உள்ளன. மற்ற ஊர்களில் இருந்து 4 நாட்களில் ஓட்டு மொத்தமாக 10 ஆயிரத்து 445 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

பொங்கல் பண்டிகை முடிந்து பிற ஊர்களில் இருந்து சென்னை திரும்புவதற்காக 17-ந்தேதி முதல் 20-ந் தேதி வரை மொத்தமாக 3776 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. மேலும் முக்கிய பகுதிகளில் இருந்து பல்வேறு மற்ற ஊர்களுக்கு திரும்புவதற்காக 7841 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

சென்னை கோயம்பேட்டில் பொங்கல் பண்டிகை பேருந்துகளுக்கான முன்பதிவு சிறப்பு கவுண்ட்டர்களை போக்குவரத்துத்துறை அமைச்சர் திறந்து வைத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here